குஜராத் அணி … கொல்கத்தாவுடன் இன்று மோதல் …

by Lifestyle Editor

ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று மதியம் 3.30-க்கு தொடங்கவுள்ளது. இதில் வெற்றி பெற்றால் பாயின்ட்ஸ் டேபிளில் குஜராத் அணி முதலிடத்திற்கு முன்னேறி விடும். 6 ஆவது இடத்தில் இருக்கும் கொல்கத்தா அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற இனி வரும் அனைத்து ஆட்டங்களிலும் முழு திறமையை வெளிப்பத்த வேண்டும். இதனால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணியில் பேட்டிங் மற்றும் பவுலிங் வரிசை வலுவாக இருப்பதால் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணியால் அதனை எளிதில் வீழ்த்தி விட முடியாது. சுப்மன் கில் ஓரளவு விளையாடினாலும், ரிதிமன் சாஹாவின் ஆட்டம் அணிக்கு கவலை அளிக்கும் விதத்தில் உள்ளது.

ஹர்திக் பாண்ட்யா, விஜய் சங்கர், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் தெவாட்டியா, ரஷித் கான் என குஜராத் அணியின் பேட்டிங் வரிசை திறமையான ஆட்டக்காரர்கள் கொண்டிருப்பதால், இன்றைய போட்டியில் அதிக ரன்கள் குவிக்கப்பட வாய்ப்புள்ளது. கொல்கத்தா அணியில் கேப்டன்ஷிப் மாற்றம் காரணமாக தொடக்கத்தில் தடுமாற்றம் ஏற்பட்டாலும், நிதிஷ் ராணா சிறப்பாக செயல்பட்டு தனது திறமையை நிரூபித்துள்ளார். ஜேசன் ராய், நிதிஷ் ராணா, ரின்கு சிங் ஆகியோரை தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்கள் ஃபார்ம் அணிக்கு கவலையளிக்கிறது.

கடந்த சில சீசன்களில் அதிரடியாக ரன்களை குவித்த ஆண்ட்ரே ரஸல் இந்த தொடர் முழுவதும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சுனில் நரேனால் பேட்டிங் / பவுலிங் என எதிலும் பங்களிப்பு செய்ய முடியவில்லை. வருண் சக்கரவர்த்தி, நிதிஷ் ராணா, சுயாஷ் சர்மாவை உள்ளிட்ட சிலரை தவிர்த்து மற்ற பவுலர்கள் திணறி வருகின்றனர். ஒப்பீட்டளவில் கொல்கத்தா அணியை விட குஜராத் டைட்ன்ஸின் கையே ஓங்கி காணப்படுகிறது. தங்களது முழு திறமையை சரியாக வெளிப்படுத்தினால் மட்டுமே இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை கொல்கத்தாவால் வீழ்த்த முடியும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கணித்துள்ளார்கள்.

Related Posts

Leave a Comment