ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்சர்கள் அடித்த 3-ஆவது அணி – சி.எஸ்.கே.

by Lifestyle Editor

ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்சர்கள் அடித்த 3-ஆவது அணி என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தா அணிக்கு எதிராக ஈடன் கார்டனில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின்போது, முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி இந்த சாதனையை உருவாக்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 235 ரன்களை குவித்தது. அடுதது விளையாடிய கொல்கத்தா அணியால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 29 பந்துகளில் 71 ரன்களை எடுத்த அஜிங்யா ரஹானே ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியில் சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் ருதுராஜ் கெய்க்வாட் 35 ரன்களும், டெவோன் கான்வே 56 ரன்களும், அஜிங்யா ரஹானே 71 ரன்களும் குவித்தனர். ஷிவம் துபே 50 ரன்னும் ரவிந்திர ஜடேஜா 18 ரன்னும் எடுக்க சென்னை அணி 235 ரன்களை எட்டியது. இந்த போட்டியில் பவுண்டரிகளை விட சிக்சர்களே அதிகம் அடிக்கப்பட்டன. ருதுராஜ் 3, டெவோன் கான்வே 3, ரஹானே 5, ஷிவம் துபே 5, ரவிந்திர ஜடேஜா 2 என மொத்தம் 18 சிக்சர்களை பறக்க விட்ட து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

ஒட்டுமொத்தமாக சென்னை அணி இந்த போட்டியில் 14 பவுண்டரிகளை அடித்தது. அந்த வகையில் ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்சர்களை அடித்த அணி என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த ஐபிஎல் தொடரில் ஏற்படுத்தியுள்ளது. இதுவரை பங்கேற்ற 7 போட்டிகளில் 5 இல் வெற்றி பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பாயின்ட்ஸ் டேபிளில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. சென்னை அணிக்கு இன்னும் 7 போட்டிகள் மீதம் உள்ள நிலையில் மிக எளிதாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு சி.எஸ்.கே. முன்னேறும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கணித்துள்ளனர். முன்னதாக 2013-இல் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக பெங்களூரு அணி 21 சிக்சர்களையும், 2016-இல் இதே ஆர்.சி.பி. குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான 20 சிக்சர்களையும் அடித்திருந்தது.

Related Posts

Leave a Comment