விளையாட்டு மைதானங்களில் மதுபானம் அருந்த அனுமதி – எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் …

by Lifestyle Editor
0 comment

கல்யாண மண்டபத்திலும், விளையாட்டு திடல்களிலும், மதுபானம் அருந்தலாம் என அறிவித்துள்ள திமுக அரசுக்கு தனது கடும் கண்டனங்களை தெரிவித்து கொள்வதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுமானத்தை பயன்படுத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மது பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியர்கள் அனுமதியுடன், மதுவிலக்குத்துறை சிறப்பு அனுமதி வழங்கலாம் என புதிய சட்டத்திருத்தத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் உரிய அனுமதி பெற்று இனி திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பயன்படுத்தலாம். கட்டணம் செலுத்தி மதுபானம் பயன்படுத்த அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், மதுவிலக்கே ஒற்றை இலக்கு என கூறிவிட்டு 12 மணிநேரம் மதுக்கடைகளை திறந்து வைத்திருக்கும் இந்த திமுக அரசு, இன்று கல்யாண மண்டபத்திலும், விளையாட்டுத் திடல்களிலும், மதுபானம் அருந்தலாம் என அனுமதித்திருப்பதற்கு எனது கடும் கண்டனங்கள். மதுவுக்கு அடிமையாக்கி இளைஞர்களின் எதிர்காலத்தை சீர்குலைத்து, கலாச்சாரத்தின் மீது திராவகத்தை வீசியுள்ள இந்த திராவக மாடல் அரசு, பொது அமைதியை சீர்குலைத்து குற்றச் செயல்களை அதிகரிக்கும் இத்தகைய மக்கள் விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இந்த அரசுக்கு மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவர் என்பது மட்டும் உறுதி. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment