இந்தியாவில் ஒரே நாளில் 12,193 பாதிப்புகள் …

by Editor News

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே கொரோனா பாதிப்புகள் இருந்து வந்தாலும் ஊரடங்கு, தடுப்பூசி உள்ளிட்ட நடவடிக்கைகளால் கொரோனா வெகுவாக குறைந்திருந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக மீண்டும் கொரோனா பாதிப்புகள் மெல்ல அதிகரித்து வருகின்றன. இதனால் கொரோனா அதிகம் பரவும் மாநிலங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று 11,692 ஆக இருந்த கொரோனா பாதிப்புகள் இன்று 12,193 ஆக அதிகரித்துள்ளது. தினசரி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 67,556 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் உயர்ந்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

Leave a Comment