ரெட்டினால் கெமிக்கலை பயன்படுத்தினால் ஆபத்தா ..

by Lifestyle Editor

பெரும்பாலும், ரெட்டினால் சார்ந்த பொருட்களை இரவு நேரத்தில் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. இது சூரிய கதிர்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவும்.

ரெட்னால் சருமத்தை மெல்லியதாக்கும் :

இது ரெட்டினால் பற்றிய ஒரு பொதுவான கட்டுக்கதை. உண்மை என்னவென்றால், ரெட்டினால் கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமாக சருமத்தை தடிமனாக மாற்ற உதவுகிறது.

ரெட்டினால் வயதான எதிர்ப்பு (ஆன்டி-ஏஜிங்) பண்புகளுக்காகவே பயன்படுத்தப்படுகிறது: பொதுவாக ரெட்டினால் வயதான அறிகுறிகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டாலும், அது முகப்பருவை போக்கவும் மற்றும் சருமத்தின் தொனியை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படலாம்.

ரெட்டினால்களை பகல் நேரத்தில் பயன்படுத்தக்கூடாது :

பெரும்பாலும், ரெட்டினால் சார்ந்த பொருட்களை இரவு நேரத்தில் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. இது சூரிய கதிர்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவும். ஆயினும், நீங்கள் ஒரு பரந்த ஸ்பெக்ட்ரம் கொண்ட சன்ஸ்கிரீன் பயன்படுத்துகிறீர்கள் என்றால் தாராளமாக பகல் நேரத்தில் கூட நீங்கள் ரெட்னாலை பயன்படுத்தலாம்.

ரெட்டினால்களை பிற சரும பராமரிப்பு பொருட்களுடன் இணைத்து பயன்படுத்தலாம் :

ரெட்டினால் சருமத்தில் சிறப்பாக செயல்பட்டாலும் அதனை அமிலங்கள் அல்லது பென்சாயில் பெராக்சைடு போன்ற பிற பொருட்களுடன் இணைத்து பயன்படுத்தும்பொழுது சரும எரிச்சல் உண்டாகலாம்.

ஆகையால், எந்த ஒரு செயலில் உள்ள பொருளை ரெட்டினாலுடன் சேர்த்து பயன்படுத்துவதற்கு முன் தோல் சிகிச்சை நிபுணரை சந்தித்து அவரது ஆலோசனையைப் பெறுவது மிகவும் அவசியம்.

Related Posts

Leave a Comment