குக் வித் கோமாளியில் நடப்பது இதுதான் – சிவாங்கி

by Lifestyle Editor

கடந்த சீசன்களின் கோமாளியாக கலக்கி வந்த சிவாங்கி இந்த சீசனில் குக்காக கலக்கி வருகிறார். இந்த நிகழச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு குக்குகள் எலிமினினேட் செய்யப்படுவார்கள்.

இந்நிலையில் இந்த வார எலிமினேஷன் சுற்றில் ஷிவாங்கி மற்றும் விஜே விஷால் இருவரும் கலந்து கொண்டனர்.

இதில் இந்தவாரம் விஜே விஷால் எலிமினேட் ஆக்கப்பட்டார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் விஷால் ஏற்கனவே இரண்டு முறை குக் ஆஃப் தி வீக் விருதை வென்றுள்ளார்.

மேலும், ஷெரின், ஸ்ருஷ்டி, சிவாங்கி ஆகியோர் எலிமினேட் செய்யப்படாமல் காப்பாற்றப்பட்டு வருகிறார்கள் என பலரும் தங்கள் விமர்சனத்தை தெரிவித்து வந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து ஷிவாங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டிருக்கிறார்.

அதில், இந்த சீசன் தொடங்கியதில் இருந்தே நான் எப்படி சமைக்கிறேன் என்பதில் குழப்பம் நிலவுகிறது. இதற்காக தினமும் ஆறு முதல் ஏழு மணி நேரம் பயிற்சி செய்கிறேன்.

நான் மட்டுமின்றி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் மிகுந்த கடின உழைப்பையும், பல தியாகங்களையும் உங்களை மகிழ்விப்பதற்காக செய்து வருகிறோம் மன உருக்கத்தோடு தெரிவித்திருக்கிறார்.

Related Posts

Leave a Comment