மில்க் ஷேக் …

by Lifestyle Editor

தேவையான பொருட்கள் :

தேங்காய் – 1/2 மூடி.

இளநீர் – 1.

சர்க்கரை – 4 ஸ்பூன்.

பால் – 1/2 கப்.

ஜஸ் கட்டிகள் – தேவையான அளவு.

செய்முறை :

மில்க் ஷேக் செய்வதற்கு முன்னதாக, எடுத்துக்கொண்ட அரை மூடி தேங்காயினை ஓடு நீக்கி சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

இப்போது எடுத்து வைத்துள்ள இளநீரை உடைத்து, அதில் உள்ள தண்ணீரை ஒரு கோப்பையிலும், இளநீர் வழுக்கையை மற்றொரு கோப்பையிலும் தனித் தனியே எடுத்து வைக்கவும்.

தற்போது ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் பொடியாக நறுக்கிய தேங்காய், இளநீர் மற்றும் இளநீர் வழுக்கை ஆகியவற்றை சேர்த்து ஒரு முறை நன்கு அரைத்துக்கொள்ளவும்.

தொடர்ந்து இதனுடன் மூன்று ஸ்பூன் சர்க்கரை சேர்த்து ஒரு முறை நன்கு அரைத்துக்கொள்ளவும்.

இதேப்போன்று சுத்தமாக உள்ள பசும்பாலையும் இதனுடன் சேர்த்து ஒரு முறை நன்கு அரைத்துக்கொள்ளவும்.

இறுதியாக இதனுடன் தேவையான அளவு ஐஸ் கட்டிகளை சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ள சுவையான கோகோனட் மில்க் ஷேக் ரெடி.

மிக்ஸி ஜாரில் உள்ள இந்த மில்க் ஷேக்கினை ஒரு கிளாஸில் ஊற்றிக்கொள்ளவும். தேவைப்பட்டால் இதன் மீது இலவங்கப்பட்டை பொடி தூவி பரிமாறலாம்.

Related Posts

Leave a Comment