பாகற்காயில் உள்ள சத்துக்கள்

by Lifestyle Editor

கசக்கும் காய் என்றாலும் பாகற்காயை சமையலில் சேர்த்துக் கொள்வதில் இருந்தே இதன் முக்கியத்துவம் புரியும். அதிலுள்ள சத்துக்களை பட்டியலிடுவோம்…

* பாகற்காயின் அறிவியல் பெயர் மொமோர்டிகா சாரன்டியா. தெற்கு ஆசியாவை தாயகமாகக் கொண்டவை. தற்போது ஆசிய நாடுகள் முழுமையும் பரவலாக விளைகிறது. ஆண்டு முழுவதும் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும்.
* குறைந்த ஆற்றல் வழங்குபவை பாகற்காய்கள். 100 கிராம் பாகற்காயில் 17 கலோரி ஆற்றலே உடலுக்கு கிடைக்கிறது.
* ‘பாலிபெப்டைடு-பி’ எனப்படும் குறிப்பிடத்தக்க சத்துப்பொருள் பாகற்காயில் காணப்படுகிறது. இதனை தாவரங்களின் ‘இன்சுலின்’ என்று கருதுகிறார்கள். ஏனெனில் தாவரங்களில் சர்க்கரை மிகுதியாகாமல் கட்டுப்படுத்துவது இதுதான்.
* சிறந்த நோய் எதிர்ப்பு பொருளான வைட்டமின்-சி, பாகற்காயில் மிகுதியாக உள்ளது. 100 கிராம் பாகல் விதையில் 84 மில்லிகிராம் வைட்டமின்-சி உள்ளது. இயற்கை நோய் எதிர்ப்பு பொருளான இது, தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டியடிக்கும்.
* பீட்டா கரோட்டின், ஆல்பா கரோட்டின், லுடின், ஸி-சாந்தின் போன்ற பிளோவனாய்டுகள் இதில் உள்ளன. அத்துடன் வைட்டமின்-ஏ அதிகஅளவில் உள்ளது. இவை புற்றுநோயை உருவாக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டுவதோடு, வயது மூப்படைவதில் இருந்தும், வியாதிகள் தாக்காதவாறும் பாதுகாக்கும்.
* ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் பாகற்காய்க்கு உண்டு. மலச்சிக்கல் மற்றும் அஜீரணத்தை போக்கும்.
* வைட்டமின்-பி 3, வைட்டமின் பி-5, வைட்டமின்-பி6 போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும், இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் மக்னீசியம் போன்ற முக்கியத் தாதுக்களும் பாகற்காயில் இருந்து உடலுக்கு கிடைக்கிறது. பாகற்காயின் விதைகள் எளிதில் ஜீரணமாகும் நார்ப்பொருட்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள், நோய் எதிர்ப்பு பொருட்களைக் கொண்டது.

Related Posts

Leave a Comment