தினமும் மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் …

by Lifestyle Editor

குளிர்ந்த மோர் கோடை காலத்திற்கான ஒரு இனிமையான பானம். காலம் காலமாக கோடைகாலத்தில் பருகும் அருமையான பானம் இது. இது எண்ணற்ற நன்மைகளையும் கொண்டுள்ளது. பாலில் இருந்து வெண்ணையை பிரித்தெடுத்த பின்னர், மீதம் உள்ள நீரைத் தான் மோர் என்கிறோம். தயிரில் நீர் கலந்து கரைத்தும் செய்யலாம். சந்தைகளில் பலவகையான மோர் கிடைக்கிறது. நம் உடலுக்கு எந்தவிதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமல், தாகத்தை தனித்து உடலின் நீர்ச்சத்தை தக்கவைக்கும் மோரின் நம்பமுடியாத மருத்து குணங்கள் பற்றி இங்கே காணலாம்.

உடல் வறட்சியை தடுக்கும் :

மோரில் உள்ள எலக்ட்ரோலைட்ஸ் நம் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது. ஒரு கிளாஸ் மோருடன் உப்பு சேர்த்து தினம் குடித்து வர உடல் மற்றும் சரும வறட்சி பிரச்சனைகள் நீங்கும்.

மலச்சிக்கல் பிரச்சனை :

மலச்சிக்கல், செரிமான பிரச்சனை உள்ளவர்கள் மோர் குடிப்பது நல்லது. மோரில் காணப்படும் புரோபயோடிக்ஸ் என்ற பாக்டீரியாக்கள், உடலில் செரிமான செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.

இரத்த போக்கு பிரச்சனைக்கு :

மாதவிடாய் காலங்களில் பெண்கள் எதிர்க்கொள்ளும் அதிகப்படியான இரத்தப்போக்கு பிரச்சனைக்கும், வயிற்று வலிக்கும் மோர் ஒரு சிறந்த மருந்தாக உள்ளது. ஒரு கோப்பை மோரில் வெந்தயம் சேர்த்து குடித்து வர இந்த பிரச்சனைகள் நீங்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது :

மோரில் காணப்படும் லாக்டிக் அமில பாக்டீரியா ஆன்டிபாடிகளின் உற்பத்தியை அதிகரிக்கும், இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது.

எலும்பு ஆரோக்கியம்:

ஆரோக்கியமான எலும்புகளுக்கு முக்கியமான கால்சியம் மற்றும் பிற தாதுக்கள் மோரில் ஏராளமாக உள்ளன. தொடர்ந்து மோர் உட்கொள்வது ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு நோய்களைத் தடுக்க உதவும்.

Related Posts

Leave a Comment