காங்கிரஸ் உண்ணாவிரதம் அறிவிப்பு – டெல்லி ராஜ்கோட்டில் 144 தடை உத்தரவு

by Lifestyle Editor

ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ள நிலையில், டெல்லி ராஜ்கோட் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு நிரவ் மோடி தப்பி ஓடிய விவகாரத்தில், எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறதது என ராகுல் காந்தி பேசியிருந்தார். மோடி என்ற பெயரை பயன்படுத்தி சர்ச்சையாக பேசியது தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதேநேரம் மேல்முறையீடு செய்ய உள்ளதாக ராகுல்காந்தி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து, அதற்கு அனுமதி அளிக்கும் விதமாக 30 நாட்கள் அவகாசம் அளித்து நீதிமன்றம் பினை வழங்கியிருந்தது. இதனிடையே மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி எம்பிக்கள், எம்எல்ஏக்கள் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றால் குற்றம் நிரூபிக்கப்பட்ட நாளில் இருந்து அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்கிற நிலை உள்ளது. இந்த நிலையில், வயநாடு தொகுதி எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மக்களவை செயலகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து டெல்லி ராஜ்கோட் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதனால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் அங்கு 144 தடை விதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment