குக் வித் கோமாளி அடுத்த வாரம் எலிமினேஷனில் இருந்து தப்பித்த போட்டியாளர்.. இது இரண்டாவது முறை

by Lifestyle Editor

CWC 4

குக் வித் கோமாளி சீசன் 4 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஒரு வாரம் இம்யூனிட்டி சுற்று மற்றொரு வாரம் எலிமினேஷன் சுற்று என்பது போல் தான் இந்த நிகழ்ச்சியின் கட்டமைப்பு உள்ளது.

அந்த வரிசையில் இந்த வாரம் இம்யூனிட்டி சற்று நடைபெற்ற நிலையில், இதில் நடந்த முதல் நாள் டாஸ்கில் மைம் கோபி மற்றும் ஜி.பி. முத்து இருவரும் அட்வான்டேஜ் டாஸ்க்கை வென்றனர்.

தப்பித்த போட்டியாளர்

இதன்பின் இன்று நடைபெற்ற இம்யூனிட்டி சுற்றியில் நன்றாக சமைத்து நடுவர்களிடம் பாராட்டை பெற்ற ஆண்ட்ரியன் மற்றும் தங்கதுரை இருவரும் இம்யூனிட்டி சுற்றை வென்றுள்ளனர்.

இதன்முலம் அடுத்த வாரம் நடைபெறவுள்ள எலிமினேஷன் சுற்றில் இருந்த ஆண்ட்ரியன் தப்பித்துள்ளார். மேலும் இரண்டாவது முறையாக அவர் இம்யூனிட்டி சுற்றை வென்றுள்ளார் என்பது குறிப்பித்தக்கது.

Related Posts

Leave a Comment