சம்மணம் இட்டு சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

by Lifestyle Editor

கடந்த 30, 40 வருடங்களுக்கு முன்னாள் அனைவரும் சம்மணம் இட்டு தான் சாப்பிட்டார்கள் என்பதும் டைனிங் டேபிள் போன்றவை அப்போது கிடையாது என்பதும் தெரிந்ததே. ஆனால் தற்போதைய நாகரீக உலகில் டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிடுவது வழக்கம் ஆகிவிட்ட நிலையில் சம்மணம் போடாமல் காலை தொங்க வைத்துக்கொண்டு சாப்பிடுவதால் பல உடல் உபாதைகள் உருவாகிறது என முன்னோர்கள் கூறியுள்ளனர்.

நம் முன்னோர்கள் எது செய்தாலும் அதில் ஒரு உள் அர்த்தம் இருக்கும் என்பது போல் சம்மணம் இட்டு சாப்பிடுவதிலும் ஒரு உள் அர்த்தம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காலை தொங்க போட்டு சாப்பிட்டால் உடலில் ரத்த ஓட்டம் இடுப்புக்கு கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக இருக்கும், ஆனால் காலை மடக்கி சம்மந்தம் போட்டு அமர்ந்து சாப்பிடும் போது ரத்த ஓட்டம் உடல் முழுவதும் சீராக இருக்கும்

எனவேதான் சாப்பிடும் போது ரத்த ஓட்டம் சீராக இருந்தால் மட்டுமே சாப்பிட்ட உணவு எளிதாக ஜீரணம் ஆகும் என்று கூறப்படுகிறது. எனவே சாப்பிடும் பொழுது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும் என்பதே முன்னோர்களின் அறிவுரையாக இருக்கிறது.

முடிந்தவரை காலை தொங்க வைத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கட்டில் மற்றும் சோபாவில் அமரும்போது கூட சம்மணம் இட்டு அமருங்கள் என்றும் முன்னோர்கள் கூறி வருகின்றனர்.

Related Posts

Leave a Comment