வெல்லத்தில் இத்தனை வகைகளா..?

by Lifestyle Editor

தென்னை வெல்லமும் பனை வெல்லம் போன்றதுதான். இரும்புச் சத்து மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய சத்துகள் நிறைந்துள்ளன. மசாலா நிறைந்த கிரேவிகளில் அதிகப்படியான காரத்தை குறைப்பதற்கு இந்த தென்னை வெல்லம் சேர்க்கின்றனர். கடைகளில் விற்பனையாகும் நாட்டுச் சர்க்கரை பெரும்பாலும் தென்னை அல்லது கரும்புச் சாற்றில் இருந்து தயாரிக்கப்படுவதுதான்.

பழங்காலத்தில் இருந்தே இனிப்புச் சுவைக்கு பயன்படுத்தப்படும் முக்கிய பொருளாக வெல்லம் உள்ளது. நம் உடலில் ரத்த விருத்திக்கும், தசை வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கிறது என்று ஆயுர்வேத புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. குளிர்காலத்தில் வெல்லம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

பெரும்பாலான மக்களுக்கு வெள்ளை நிற சீனிக்கும், வெல்லத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் புரிவதில்லை. வெள்ளை சீனி என்பது மொலாசஸ் நீக்கப்பட்ட சர்க்கரை ஆகும். ஆனால், வெல்லம் என்பது மொலாசஸ் நீக்கப்படாத சிவப்பு அல்லது அடர் அரக்கு நிற கட்டியாகும். வளர் இளம் குழந்தைகளுக்கு வெல்லம், எள்ளு சேர்த்து சாப்பிடக் கொடுத்தால் அவர்கள் போஷாக்குடன் வளருவார்கள்.

வெல்லத்தின் மூல பொருள் :

தாவரம் மற்றும் மரம் சார்ந்த பொருட்களே வெல்லத்திற்கான ஆதாரங்களாக உள்ளன. இந்தியா உள்பட ஆசிய நாடுகளில் வெல்லம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலக அளவில் சுமார் 55 சதவீத வெல்லம் உற்பத்தி இந்தியாவில் நடக்கிறது. மினரல்கள், வைட்டமின்கள் நிறைந்த வெல்லம் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

கரும்பு சர்க்கரை :

பெரும்பாலான வெல்லம் கரும்புச் சாறில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. கரும்புச் சாற்றை காய்ச்சி, ஆற வைத்து, அதனை வடிகட்டி மீண்டும் கட்டியாக வருவதே வெல்லம் ஆகும். இந்த பாகு எடுத்து அச்சுகளில் ஊற்றி எடுக்கப்படுவதால் இது அச்சு வெல்லம் என்றும் அழைக்கப்படுகிறது. அதேபோல, கரும்பு சக்கை தூள் செய்யப்பட்டும் விற்பனைக்கு வருகிறது.

பனை வெல்லம் :

சந்தையில் தற்போது விற்பனை செய்யப்படுவதிலேயே மிகவும் அதிக விலை கொண்டது இதுதான். பனை வெல்லத்தை கருப்பட்டி என்றும் அழைக்கின்றனர். நல்ல சாக்கலேட் போல அடர் பிரவுண் நிறத்தில் இருக்கின்ற இந்த பனை வெல்லத்தில் மருத்துவ குணங்கள் உடையது என்று பரவலான நம்பிக்கை இருக்கிறது. குறிப்பாக சளி, இருமல் போன்ற பிரச்சினைகளில் இருந்து நம்மை தற்காப்பதற்கான நோய் எதிர்ப்பு சக்தியை இது வழங்குவதாக கருதப்படுகிறது. குழந்தைகளுக்கு பாலில் பனங்கற்கண்டு சேர்த்து கொடுக்க தாய்மார்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

தென்னை வெல்லம் :

இதுவும் பனை வெல்லம் போன்றதுதான். இரும்புச் சத்து மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய சத்துகள் நிறைந்துள்ளன. மசாலா நிறைந்த கிரேவிகளில் அதிகப்படியான காரத்தை குறைப்பதற்கு இந்த தென்னை வெல்லம் சேர்க்கின்றனர். கடைகளில் விற்பனையாகும் நாட்டுச் சர்க்கரை பெரும்பாலும் தென்னை அல்லது கரும்புச் சாற்றில் இருந்து தயாரிக்கப்படுவதுதான்.

எது சிறப்பானது? பனை வெல்லம், தென்னை வெல்லம், கரும்பு வெல்லம் என எதுவானாலும் ஒவ்வொன்றிலும் தனித்துவமான மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இரும்புச்சத்து குறைபாடு காரணமாக ரத்தச் சோகை இருப்பவர்கள் தினசரி சிறிதளவு வெல்லம் சாப்பிடலாம். இதில் எந்த அளவுக்கு ஃப்ரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் இருக்கிறது என்பதே வேறுபடுகிறது. இருப்பினும், குறைவான கிளைசமிக் இண்டெக்ஸ் கொண்ட பனை வெல்லம் தான் இருப்பதிலேயே சிறப்பு மிகுந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால், இதன் விலையும் சற்று அதிகம் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

Related Posts

Leave a Comment