தை அமாவாசை தரிசனம்! சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி ..!

by Lifestyle Editor

தை அமாவாசையையொட்டி சதுரகிரியில் உள்ள சுந்தரமகாலிங்க சுவாமி மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அமைந்துள்ள சுந்தரமகாலிங்க சுவாமி மலைக்கோவில் புகழ்பெற்ற சிவன் ஸ்தலமாகும். மாதம்தோறும் அமாவாசை, பௌர்ணமி மற்றும் சிவராத்திரி சமயங்களில் இந்த மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தமிழ்நாடு வனத்துறை அனுமதி அளித்து வருகிறது.

இந்நிலையில் தை அமாவாசை, சிவராத்திரியை முன்னிட்டு இன்று முதல் ஜனவரி 22 வரை சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது. ஆனால் இரவில் கோவிலில் தங்கவோ, ஓடைகளில் குளிக்கவோ அனுமதி கிடையாது என்றும் வனத்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

Related Posts

Leave a Comment