கண்களை ஸ்கேன் செய்தால் ரேஷன் பொருள்! – அமைச்சர் அறிவிப்பு

by Lifestyle Editor

தமிழ்நாட்டு ரேஷன் கடைகளில் கண்களை ஸ்கேன் செய்து ரேஷன் பொருட்களை வழங்கும் முறை விரைவில் அமலுக்கு வரும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மக்களுக்கு அரசின் மலிவு விலை, இலவச உணவுப் பொருட்களை வழங்கும் நியாய விலைக்கடைகள் அனைத்து பகுதிகளிலும் செயல்பட்டு வருகின்றன. காலத்திற்கு ஏற்ப ரேஷன் பொருள் வழங்கல் முறையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.

தற்போது ரேஷன் கடைகள் டிஜிட்டல்மயமாகியுள்ள நிலையில் பயோமெட்ரிக் முறையில் குடும்ப அட்டைதாரர்களின் கைரேகைகளை பதிவு செய்து ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்தக்கட்டமாக பயோமெட்ரில் வேலை செய்யாவிடில் குடும்ப அட்டைதாரர்களின் கண்களை ஸ்கேன் செய்து ரேஷன் பொருட்களை தர ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக சட்டமன்ற கூட்டத்தில் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

முதல் முயற்சியாக நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் தலா ஒரு ரேஷன் கடைகளில் புதிய முறை அமல்படுத்தப்படும் என்றும், பின்னர் படிப்படியாக அனைத்து ரேஷன் கடைகளிலும் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment