ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்று பணி? – அமைச்சர் அறிவிப்பு ..

by Lifestyle Editor

கொரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு மாற்று பணி வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

கடந்த 2020ம் ஆண்டில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் தமிழகத்தில் சுகாதார சேவைகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் பலர் நியமிக்கப்பட்டனர். கடந்த 2 ஆண்டுகளாக 2,300க்கும் அதிகமான ஒப்பந்த செவிலியர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரிகளில் பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில் இவர்களது ஒப்பந்த காலம் டிசம்பர் 31ல் முடிவடைந்த நிலையில் அவர்களது ஒப்பந்த காலம் நீட்டிக்கப்படாது என தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ஆனால் ஒப்பந்தகால செவிலியர்கள் தங்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் “ஒப்பந்த கால செவிலியர்களுக்கு ஒப்பந்த நீட்டிப்பு செய்யப்படாவிட்டாலும், மாற்று பணிகள் வழங்கப்படும். அரசின் நடமாடும் மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவர்களுக்கு மாற்று பணிகள் வழங்கப்படும். மாவட்ட கலெக்டர்கள் தலைமையிலான குழு இந்த பணி வழங்குதலை கவனிப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment