வங்கதேச அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் – வெற்றிக்காக போராடும் இந்திய அணி

by Lifestyle Editor

வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 67 ரன்கள் தேவைப்படும் நிலையில், இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து திணறி அடைந்து வருகிறது.

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்கா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மோமினுள் 84 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தொடக்கத்தில் தடுமாறினாலும், பின்னர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரிஷப் பந்த் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்டனர். இறுதியா இந்திய அணி முதல் இன்னிங்சில் 314 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரிஷப் பந்த் 93 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 87 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி இரண்டாவது இன்னிங்சில் 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணிக்கு 145 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறி வருகிறது. 4வது நாள் ஆட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி 32 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் குவித்துள்ளது. வெற்றிக்கு 67 ரன்கள் தேவைப்படும் நிலையில், இந்திய அணியில் 3 விக்கெட்டுகள் மட்டுமே மீதமுள்ளது. ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் அஸ்வின் ஆகியோர் களத்தில் நின்று வெற்றிக்காக போராடி வருகின்றனர்.

Related Posts

Leave a Comment