உதயநிதி பதிலாக கமல் ஹாசன் படத்தில் நடிக்கவரும் பிரபல நடிகர்.. யார் தெரியுமா

by Lifestyle Editor

கமல் – உதயநிதி

கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகவிருக்கும் 54வது படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்க கமிட்டாகி இருந்தார்.

ஆனால், தற்போது அமைச்சர் ஆகிவிட்டதால், சினிமாவில் அதிக நேரம் செலவிடமுடியாது என்பதன் காரணமாக சினிமாவில் இருந்து வெளியேறிவிட்டார்.

இதனால், கமல் ஹாசன் படத்தில் நான் நடிக்கவில்லை என்று உதயநிதி கூறியிருந்தார்.

கமல் – விஜய் சேதுபதி

இந்நிலையில், இப்படத்தில் உதயநிதிக்கு பதிலாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை ஹீரோவாக நடிக்க வைக்க கமல் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment