வில்லன் இல்லை, அரசியல்வாதி… ‘பீஸ்ட்’ படத்தில் செல்வராகவனின் கதாபாத்திரம் குறித்த அப்டேட்!

by Column Editor

பீஸ்ட் படத்தின் செல்வராகவனின் கதாபாத்திரம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.

தமிழில் முன்னணி இயக்குனராக வலம் வரும் செல்வராகவன் தற்போது நடிகராகவும் களமிறங்கியுள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷுடன் செல்வராகவன் ‘சாணிக் காயிதம்’ படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் மிரட்டலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதையடுத்து தற்போது விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘பீஸ்ட்’ படத்திலும் செல்வராகவன் நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் செல்வராகவன் வில்லனாக நடிப்பதாகத் தற்போது வரை கூறப்பட்டு வந்தது.

ஆனால் செல்வராகவன் இந்தப் படத்தில் அரசியல்வாதியாக நடிப்பதாக அப்டேட் கிடைத்துள்ளது. படத்தில் அவரது பாத்திரம் வித்தியாசமாக இருக்கும், மேலும் சீரியஸ் கதாபாத்திரங்களை வடிவமைப்பதில் பெயர் பெற்ற செல்வராகவன் இந்தப் படத்தில் நகைச்சுவையான கதாபாத்திரத்தில் காணப்படுவார் என்றும் கூறப்படுகிறது. பீஸ்ட் படத்தில் செல்வராகவனின் கதாபாத்திரம் நம்மை ஆச்சர்யப்படுத்தப் போவது உறுதி!

இதற்கிடையில் திரௌபதி இயக்குனர் மோகன்ஜி இயக்கத்தில் புதிய படத்திலும், ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் ஒரு படத்திலும் செல்வராகவன் நடிக்க உள்ளார்.

Related Posts

Leave a Comment