1 மில்லியன் லைக்ஸ் பெற்ற ‘சில்லா சில்லா’ பாடல் ..

by Lifestyle Editor

எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ள திரைப்படம் துணிவு.

போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் முதல் பாடல் சில்லா சில்லா நேற்று மாலை அதிரடியாக வெளிவந்தது.

செம மாஸாக அமைத்திருந்த சில்லா சில்லா பாடலை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில், நேற்று மாலை வெளிவந்த இப்பாடல் இதுவரை 1 மில்லியன் லைக்ஸை அள்ளி youtube சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், 24 மணி நேரத்திலும் இன்னும் பல லட்சம் லைக்ஸ்களை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment