சார்லஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் புழக்கம் ..

by Lifestyle Editor

மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட மில்லியன் கணக்கான 50 பென்ஸ் நாணயங்கள் நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்கள் வழியாக இன்று (வியாழக்கிழமை) முதல் புழக்கத்தில் இருக்கும்.

புதிய மன்னரின் படத்தைக் கொண்டு அதிக அளவில் தயாரிக்கப்பட்ட முதல் நாணயங்கள் இவையாகும்.

4.9 மில்லியன் புதிய நாணயங்கள் தபால் நிலையங்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன. இது புழக்கத்திற்கு ஒதுக்கப்பட்ட மொத்த எண்ணிக்கையில் பாதி ஆகும்.

எனினும், மறைந்த ராணியின் உருவம் கொண்ட நாணயங்கள் இன்னும் கடைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment