வங்கதேச பவுலர்கள் மிரட்டல் – 186 ரன்களுக்கு சுருண்ட இந்தியா

by Lifestyle Editor

வங்கதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 186 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்தியா மற்றும் வங்காளதேச அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது. நியூசிலாந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட்ட இந்திய முன்னணி வீரர்கள் இந்த தொடரில் அணிக்கு திரும்பியுள்ளனர். கேப்டன் ரோகித் சர்மா , முன்னாள் கேப்டன் விராட் கோலி , லோகேஷ் ராகுல் ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர். இதேபோல் இஷான் கிஷன், முகமது சிராஜ், ரஜத் படிதார், ராகுல் திரிபாதி , குல்தீப் சென் உள்ளிட்டோரும் இந்த தொடரில் இடம்பெற்றுள்ளனர். மிர்பூரில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதன் காரணமாக இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணி தொடக்கம் முதலே வங்கதேச அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் 7 ரன்களிலும், கேப்டன் ரோகித் சர்மா 27 ரன்களிலும், விராட் கோலி 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஸ்ரேயஸ் ஐயர் 24 ரன்கள் எடுத்தார். இவ்வாறு விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கே.எல்.ராகுல் அரைசதம் அடித்ததோடு அணிக்காக 73 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியாக இந்திய அணி 41.2 ஓவர்களில் 186 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

Related Posts

Leave a Comment