ஃபிரென்ச் ஃபிரைஸ் செய்ய டிப்ஸ் ..

by Lifestyle Editor

மொறுமொறுப்பான, சுவையான ஃபிரென்ச் ஃபிரைஸ் விரும்பாதாவர்கள் மிகவும் குறைவு. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, எந்த வித்தியாசமுமின்றி அனைவரின் மனம் கவர்ந்த தின்பண்டங்களில் ஒன்று ஃபிரென்ச் ஃபிரைஸ். ஃபிரென்ச் ஃபிரைஸ் செய்து சாப்பிடுவதற்கு சிறப்பான நேரம் தேவையான என்ன? எந்த நேரத்திலும் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான தின்பண்டம் ஃபிரென்ச் ஃபிரைஸ். இதை செய்வதும் மிகவும் சுலபம்.

குறைந்த அளவிலான பொருட்களை வைத்தே ஃபிரென்ச் ஃபிரைசை மிகவும் எளிதாக செய்திட முடியும். ஃபிரென்ச் ஃபிரைஸ் செய்வது எவ்வளவு எளிமையானதோ, அதே அளவுக்கு கடினமானது. ஃபிரென்ச் ஃபிரைஸ் என்பது, உருளைக்கிழங்கு வறுவல் அல்ல. அதாவது, ஃபிரென்ச் ஃபிரைஸ் எப்படி செய்யபட்டாலும், விரும்பப்படும் உணவு தான். ஆனால், மிகச் சரியான முறையில், செய்யப்படும் ஃபிரென்ச் ஃபிரைஸின் சுவை அலாதியானது.

உணவகங்களில் செய்யப்படும் நேர்த்தியான க்ரிஸ்பியான ஃபிரென்ச் ஃபிரைஸ் என்பது வெளியில் மொறுமொறுப்பாகவும், உள்ளே மென்மையாகவும், கிரீமியாகவும் எப்படி செய்ய வேண்டும்? செஃப் குணால், ரெஸ்டாரன்ட் ஸ்டைல் ஃபிரென்ச் ஃபிரைஸ் ரெசிப்பியை பகிர்ந்துள்ளார்.

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு – 1

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை

பெரிய உருளைக்கிழங்குகளை தோல் சீவி, கிழங்கின் நான்கு ஓரங்களிலும் கொஞ்சம் நறுக்கி, நீளமான, கால் இன்ச் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து, வெட்டி வைத்த நீளமான உருளைக்கிழங்கு துண்டுகளை போட்டு, இரண்டு மணிநேரம் குளிர் சாதனப்பெட்டியில் வைக்கவும். இந்த செயல்முறை, உருளையில் இருக்கும் ஸ்டார்ச் (மாவு) நீக்க உதவி செய்யும். ஒரு பாத்திரத்தில், தண்ணீர் ஊற்றி, கொஞ்சம் உப்பு போட்டு கொதிக்க வைக்கவும்.

குளிர்ந்த நீரில் இருக்கும் உருளை துண்டுகளை எடுத்து கொதிக்கும் நீரில் போடவும். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, அடுப்பை அணைத்து, வடிகட்டவும். தூய்மையான துணியில் உருளைத் துண்டுகளை வைத்து, ஆற வைக்கவும். உருளைத்துண்டுகள் ஆறிய பிறகு, அதனை ஒரு ஜிப்லாக் பைக்கு மாற்றி, ஃபிரீசரில் மூன்று முதல் நான்கு மணிநேரம் வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, அதிகமான தீயில் சூடாக்கவும். உறையவைக்கப்பட்ட ஃபிரென்ச் ஃபிரைஸ் எடுத்து, நன்றாக வறுத்தெடுக்கவும்.

ஃபிரென்ச் ஃபிரைஸ் மசாலா செய்வதற்கு தேவையான பொருட்கள் :

உப்பு – 1 டீஸ்பூன்

புதினா தூள் – 1 டீஸ்பூன்

சில்லி ஃபிளேக்ஸ் – 1 டீஸ்பூன்

சாட் மசாலா – 1 டீஸ்பூன்

பொறித்த ஃபிரென்ச் ஃபிரைசை ஒரு கிண்ணத்தில் போட்டு, அனைத்து மசாலாக்களையும் ஒன்றாகக் கலக்கவும். தேவைப்படும் அளவுக்கு மசாலா மற்றும் உப்பை சேர்த்துக்கொள்ளவும்.

ஃபிரென்ச் ஃபிரைஸ் தயார்…!

Related Posts

Leave a Comment