வெஜிடபிள் சீஸ் ஆம்லெட்

by Lifestyle Editor

தேவையான பொருட்கள் :

முட்டை – 3,
குடைமிளகாய் – 1,
முட்டைகோஸ் – 100 கிராம்,
(விருப்பப்பட்டால்) கேரட்- 1,
பெரிய வெங்காயம் – 1,
பச்சை மிளகாய் – 3,
கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
சீஸ் – ஒரு சிறு கட்டி,
எண்ணெய் – தேவையான அளவு,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
உப்பு – சுவைக்கேற்ப.

செய்முறை:

முட்டையை நன்கு அடித்து வைத்துக்கொள்ளுங்கள். சீஸை துருவிக்கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய், கொத்தமல்லி, கேரட், கோஸ் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். காய்கறிக் கலவையுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கலந்துவைத்துக்கொள்ளுங்கள். அடித்து வைத்திருக்கும் முட்டையில், நறுக்கிய காய்கறிகளைக் கலந்து வைத்துக்கொள்ளுங்கள். தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டை, காய்கறிக் கலவையை சிறு அடைகளாக ஊற்றி, மேலே துருவிய சீஸைப் பரவலாகத் தூவி, வெந்ததும் திருப்பிப் போட்டு வேகவிடுங்கள். விருப்பப்பட்டால், மிளகுதூள் தூவிப் பரிமாறலாம். சூடாகச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Related Posts

Leave a Comment