மழைக்காலத்திற்கு இதமாக காலை டிபன்.?

by Lifestyle Editor

குளிர்காலத்தில் நம் உடல் குளிரை தாக்குப்பிடிப்பதற்காக நிறைய கொழுப்பு மற்றும் கலோரிகளை எரிக்கும். இதுதான் அதிக பசி எடுக்கவும், எதையாவது சாப்பிட வேண்டும் என்ற வேட்கை அதிகரிக்கவும் காரணமாகும்.

பொதுவாக கோடைகாலத்தில் நமக்கு நீர்ச்சத்து மிகுதியாக தேவை. இதனால் கோடைகாலத்தில் அதிக தண்ணீர் மற்றும் பழங்களின் ஜூஸ் போன்றவற்றை நாம் தேடி ஓடிக் கொண்டிருப்போம். ஆனால், குளிர் மற்றும் க்காலம் அப்படியல்ல. எதையாவது மொறுமொறுவென தின்ன வேண்டும் என்ற வேட்கை நம்மில் அதிகரிக்கும்.

குளிர்காலத்தில் நம் உடல் குளிரை தாக்குப்பிடிப்பதற்காக நிறைய கொழுப்பு மற்றும் கலோரிகளை எரிக்கும். இதுதான் அதிக பசி எடுக்கவும், எதையாவது சாப்பிட வேண்டும் என்ற வேட்கை அதிகரிக்கவும் காரணமாகும். சரி, இந்த மழைக்காலத்தில் காலை பொழுதில் சுவையான உணவுகளை சாப்பிடுவது எல்லோருக்கும் பிடித்தமானது தானே! அப்படியானால் என்ன உணவுகளை சாப்பிடலாம்? சில டிப்ஸ் இதோ…

பூரி மற்றும் உருளைக்கிழங்கு :

அடடா! இந்த தலைப்பை படித்ததுமே நாவில் எச்சில் ஊறுகிறதா? இருக்காதா பின்னே! சிறியவர் முதல் பெரியவர்கள் வரையில் காலை டிபனுக்கு எல்லோருக்கும் பிடித்தமான உணவு இந்த பூரி மற்றும் உருளைக்கிழங்கு மசால் தானே. குறிப்பாக, வீட்டில் அம்மா பூரி சமைத்தார் என்றால், அது உப்பி வரும்போதே நம் மனதில் ஆசைகள் பரவசமெடுத்து கிளம்பும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

சோலா பூரி :

இதுவும் பூரி வகை தான் என்றாலும் கூட, இந்த சோலா பூரிக்கு நாம் எடுத்துக் கொள்ளும் காம்பினேஷன் வேறானது. வெள்ளை சுண்டல் கொண்டு சமைத்த சென்னாவை இதற்கு சைடிஷ் ஆக நாம் எடுத்துக் கொள்கிறோம். அளவில் பெரியதாக உள்ள சோலா பூரி பெரும்பாலும் வீட்டில் சமைக்கப்படுவதில்லை. ஹோட்டல்களில் சாப்பிடும் சமயத்தில் இதனை ருசி பார்த்துக் கொள்ள வேண்டியது தான்.

தோசை மற்றும் சாம்பார் :

இந்தியர்களின் பாரம்பரிய உணவான தோசையை நாம் விட்டுக் கொடுத்து விட முடியுமா! அதுவும் முருகலான தோசையை கண்டால் நம் நாக்கு தாளம் தட்ட தொடங்கிவிடும். அதனுடன் சாம்பார் சேர்த்து சாப்பிடும்போது ருசி அலாதியாக இருக்கும். சிலருக்கு உருளைக்கிழங்கு மசால் சேர்த்து சாப்பிடுவதும் பிடித்தமானதாக இருக்கும்.

சாம்பார் இட்லி :

சாம்பார் இட்லி சுவையானது மட்டுமல்ல, மிகவும் ஆரோக்கியமானது. ஏனென்று கேட்டால் சாம்பாரில் சேர்க்கப்படும் துவரம் பருப்பு அல்லது பாசி பருப்பு போன்றவை நம் உடலுக்கு தேவையான புரதச்சத்தை காலை பொழுதிலேயே தந்து விடுகிறது. இட்லியில் சுமார் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரையில் சாம்பாரை ஊற வைத்து, சும்மா பிசைந்து, அடித்து சாப்பிடுவதில் இருக்கின்ற சுகம் வேறு எதில் கிடைக்கும்!

பாசிப்பயறு அடை :

மைதா மாவில் செய்யப்படும் புரோட்டா மற்றும் ரோடி போன்றவற்றில் இருக்கின்ற க்ளூட்டன் சத்து உங்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தக் கூடியது என்றால், உங்களுக்கான சிறந்த தீர்வாக இந்த பாசிப்பயறு அடை இருக்கும். தக்காளி மற்றும் மிளகாய் சேர்த்து அரைக்கப்பட்ட காரச்சட்னி அல்லது கொத்தமல்லி சட்னி ஆகியவை இதற்கு சூப்பரான காம்பினேஷனாக அமையும்.

Related Posts

Leave a Comment