வெளிவிவகாரச் செயலாளர் பிபா உலகக் கிண்ண தொடருக்காக கட்டார் விரைகிறார் …!

by Lifestyle Editor

பிபா உலகக் கிண்ண தொடருக்காக கட்டாருக்குச் செல்லவுள்ளதாக வெளிவிவகாரச் செயலாளர் ஜேம்ஸ் க்ளெவர் தெரிவித்துள்ளார்.

தனது அரசாங்கம் சார்பில் தன்னை பிரதிநிதித்துவப்படுத்துவதனை உறுதிசெய்த ஜேம்ஸ் க்ளெவர், பயணிக்கும் பிரித்தானிய இரசிகர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஆனால், முன்னதாக, கட்டாரில் இருக்கும் போது ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்றும் உள்ளூர் சட்டங்களுக்கு இணங்குமாறும் கூறியதற்காக அவர் விமர்சனங்களை எதிர்கொண்டார்.

கட்டாரில் ஓரினச்சேர்க்கை சட்டவிரோதமானது, ஏனெனில் இது இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் கீழ் ஒழுக்கக்கேடானதாகக் கருதப்படுகிறது. கட்டாரில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் எவருக்கும் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

கட்டார் 12 ஆண்டுகளுக்கு முன்பு 2022 கால்பந்து உலகக் கிண்ணத் தொடரை நடத்துவதற்கான உரிமையை சர்ச்சைக்குரிய வகையில் வென்றதிலிருந்து இறந்த ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதும் கவலைகள் உள்ளன.

LGBT உரிமைகள், பெண்களின் உரிமைகள் மற்றும் தங்கள் உயிரை இழந்த தொழிலாளர்களுக்கான கவலைகள் தொடர்பாக உலகக்கிண்ணத் தொடரை புறக்கணிப்பதாக தொழிலாளர் தலைவர் சர் கீர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment