வாடிவாசல் படத்தின் சோதனை படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியுள்ளது.
பாண்டிராஜ் உடன் எதற்கும் துணிந்தவன் படத்தை முடித்துள்ள சூர்யா தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். வாடிவாசல் திரைப்படம் வாடிவாசல் என்ற நாவலை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. அதில் ஜல்லிக்கட்டுக்கு முக்கிய இடம் உண்டு என்பது அனைவர்க்கும் தெரியும்.
எனவே சூர்யா அதற்காக காளைகளுடன் தீவிரமாக பயிற்சி எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. படத்தின் காட்சிகள் சிறப்பாக அமைவதற்காக காளைகளுடன் பயிற்சி எடுத்து வருகிறாராம்.
வாடிவாசல் படத்திற்காக பெரிய செட் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று சென்னையில் வாடிவாசல் படத்தின் சோதனை படப்பிடிப்பு துவக்கியுள்ளது. வாடிவாசல் போன்ற செட் அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு வீரர்கள் அதில் காணபடுகின்றனர். மதுரை மாவட்டம் முதலைக்குளம் கீழ்ப்பட்டி என்றும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அது தான் படத்தின் கதைக்களம் அமையும் இடம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சோதனை படப்பிடிப்பு புகைப்படத்தில் வெற்றிமாறன் மற்றும் சூர்யா இருவரும் காணப்படுகின்றனர்.
வாடிவாசல் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார்.
