பொண்ணுங்க பலவீனம் இல்ல பலம்ன்னு காட்டணும்… சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ட்ரைலர்

by Column Editor

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையரங்கில் வெளியாகும் சூர்யாவின் படம் என்பதால், எதற்கும் துணிந்தவனுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படத்தை இயக்கிய பாண்டிராஜ், மீண்டும் சன் பிக்சர்ஸுடன் இணைந்துள்ளார். அவர்கள் தயாரிப்பில் எதற்கும் துணிந்தவன் படத்தை இயக்கியுள்ளார். சூர்யா நடித்திருக்கும் இந்தப் படமும் பாண்டிராஜின் நம்ம வீட்டுப் பிள்ளை, கடைக்குட்டி சிங்கம் படங்களைப் போன்ற கிராமத்துப் பிண்ணனியில் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தைச் சொல்லும் படமாக உருவாகியுள்ளது.

இதில் சூர்யாவுடன் இணைந்து சத்யராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, தங்கதுரை, இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். டி.இமான் படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் மார்ச் 10-ஆம் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையரங்கில் வெளியாகும் சூர்யாவின் படம் என்பதால், எதற்கும் துணிந்தவனுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தற்போது இதன் ப்ரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று காலை 11 மணிக்கு படத்தின் ட்ரைலர் வெளியாகும் என தயாரிப்பு தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ட்ரைலருக்காக ஆர்வத்துடன் காத்திருந்தார்கள் ரசிகர்கள். இந்நிலையில் தற்போது ட்ரைலர் வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment