பிப் 17ம் தேதிக்கு மேல் பரப்புரை செய்யக்கூடாது : மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு…

by Column Editor

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி வரும் வியாழக்கிழமை 6 மணிக்கு மேல் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்ய கூடாது என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வருகிற 19ஆம் தேதி 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில், மாநகராட்சிகளுக்கு 1,347 வார்டு உறுப்பினர்களும், நகராட்சிகளுக்கு 3,843 உறுப்பினர்களும், பேரூராட்சிகளுக்கு 7,621 வார்டு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். வரும் 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. களத்தில் மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 11,196 பேரும், நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 17,922 பேரும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 28, 660 பேரும் போட்டியிருகின்றனர்.

தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வேட்பாளர்களும் நூதன முறைகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழநாடு மாநில தேர்தல் ஆணையம் தற்போது தேர்தல் பரப்புரை குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், அரசியக் கட்சிகள் பிப் 17 ஆம் தேதி (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்குக்குள் பரப்புரையை முடித்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவார்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அனுப்பிய அறிக்கையில், ” தேர்தல் நடத்தை விதிகளின்படி அரசியல் கட்சிகளின் தேர்தல் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஏனைய பிரச்சாரங்கள் அனைத்தையும் வாக்குப்பதிவு முடிவுறும் நேரத்திலிருந்து 48மணி நேரத்திற்கு முன்பாக கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும். அதன்படி, தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் ஏனைய பிரச்சாரங்கள் அனைத்தையும் 17.02.2022 (வியாழக்கிழமை) அன்று மாலை 6.00 மணிக்கு மேல் மேற்கொள்ளக்கூடாது என்பதை அரசியல் கட்சியினர், வேட்பாளர் கடைபிடிப்பதை உறுதி செய்ய அனைத்து மாவட்ட தேர்தல் அலுவார்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment