தங்கம் விலையேற்றத்தை முடிவு செய்வது யார்? எந்த நேரங்களில் பார்த்து வாங்கலாம்…

by Column Editor

தங்கம் மீதான ஈர்ப்பு எப்பொழுதும் குறைவதே இல்லை. அதிலும் இந்தியாவில் தங்கம் விலை அன்றாடம் ஏற்றம் இறக்கத்துடனே காணப்படும்.

இந்த தங்கம் விலை ஏற்றம் இறக்கத்தை யார் நிர்ணயம் செய்கிறார்கள். எதனால் விலை அதிகரிக்கிறது என்பதை பற்றி காண்போம்.

தங்கத்தின் விலை அதிகரிக்க காரணம் பங்குச்சந்தை முதலீடுகள் பாதுகாப்பான முதலீட்டை நோக்கி சென்றதால் அதன் விலையும் அதிகரிக்கிறது. அடுத்த காரணமாக, விலைவாசி அதிகரிக்கையில், ஒரு நாட்டின் கரண்சி மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

கரண்சி மதிப்பு குறையும் போது அதிக தொகை கொடுத்தும் தங்கத்தை வாங்க வேண்டிய நிலையும் ஏற்படும். இதனால், பெரும்பாலும், விலைவாசி ஏற்றவாறே இருக்கும் என்பதால், முக்கிய காரணமாகவும் அமைகிறது.

அடுத்ததாக, வங்கிகளின் வட்டி விகித மாற்றம் தான். வட்டி விகிதம் குறைந்தால் வருமானமும் குறையும். இதனால் தங்கத்தின் முதலீடு அதிகரித்து அதன் விலையும் உயரும்.

வங்கி முதலீடுகள் பெரும்பாலும் தங்கத்தை விட பாதுகாப்பானவை. வங்கியில் வட்டி விகிதம் அதிகரித்தால், முதலீடுகள் அதிக வட்டி வழங்கும் வங்கிகளுக்கு செல்லும்.

இதனால் தங்கத்தின் விலை குறைய தொடங்கும். தங்கம் அதிகமாக பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவிற்கு 2-வது இடம் உண்டு. இந்தியாவில், பண்டிகை காலம் என்றால், தங்கத்தின் விற்பனை பன்மடங்கு அதிகரிக்கும்.

இதனால் தங்கத்தின் விலை அதிகரிக்கும். மேலும், பொதுவாக மைய வங்கிகள் தங்கத்தில் முதலீடு செய்து வைத்திருக்கும். அரசின் முடிவுகளை பொறுத்து தங்கத்தை வாங்கவோ விற்கவோ நடைபெறும். அப்படி நடக்கும் போது தங்கத்தின் விலை மாற்றம் உண்டாகும்.

Related Posts

Leave a Comment