பிப்-16 முதல் நர்சரி, மழலையர் பள்ளிகள் திறக்க அனுமதி… மார்ச் 2 ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு…

by Column Editor

தமிழ்நாட்டில் மார்ச் 2 ம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பிப்., 16 முதல் நர்சரி, மழலையர் பள்ளிகள் திறக்க அனுமதியளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா 3வது அலை மற்றும் ஒமைக்ரான் பரவல் வேகமாக அதிகரிக்கத்தொடங்கியது. ஜனவரி மாத தொடக்கத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்தது. அதனால் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு, வார இறுதி நாட்களில் கோவில்களுக்குச் செல்ல தடை, மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு, பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்த கட்டுப்பாடுகளின் பலனாக ஜனவரி மாத இறுதியில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது. இதனால் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக வெகுவாக குறைந்து வருகிறது. மேலும் ஏற்கனவே நீட்டிக்கப்பட்டு தற்போது அமலில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகள் வரும் 15 ஆம் தேதியுடன் முடிய உள்ளன. இதனையடுத்து கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.

அதன் பின்னர் தற்போது, தமிழ்நாட்டில் மார்ச் 2 ம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் தளர்வுகள் :

1. சமுதாய, கலாச்சார மற்றும்‌ அரசியல்‌ கூட்டங்கள்‌ போன்ற பொது மக்கள்‌ கூடும்‌ நிகழ்வுகளுக்கும்‌ உள்ள தடை தொடரும்‌.

2. திருமணம்‌ மற்றும்‌ திருமணம்‌ சார்ந்த நிகழ்வுகள்‌ அதிகபட்சம்‌ 200௦ நபர்களுடன்‌ மட்டும்‌ நடத்த அனுமதிக்கப்படும்‌.

3. இறப்பு சார்ந்த நிகழ்வுகள்‌ 100 நபர்களுக்கு மிகாமல்‌ அனுமதிக்கப்படும்‌.

மேற்கண்ட கட்டுப்பாடுகள்‌ தவிர்த்து கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக விதிக்கப்பட்ட எனைய கட்டுபாடுகள்‌ விலக்கிக்‌ கொள்ளப்படுகின்றன.

1. நர்சரி பள்ளிகள்‌ (66, படம) மற்றும்‌ மழைலையர்‌ விளையாட்டுப்‌ பள்ளிகள்‌ (ஸு 801௦௦9) திறக்க அனுமதியளிக்கப்படு கிறது.

2. பொருட்காட்சிகள்‌ நடத்த அனுமதியளிக்கப்படுகிறது.

கொரோனா தொற்றிலிருந்து மக்களைக்‌ காத்திட அரசு மேற்கொள்ளும்‌ அனைத்து நடவடிக்கைகளுக்கும்‌ முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு உங்கள்‌ அனைவரையும்‌ கனிவுடன்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌. “என்று குறிப்பிடப்பட்டுள்லது.

மேலும் , மக்கள்‌ பொது இடங்களில்‌ கட்டாயம்‌ முகக்‌கவசம்‌ அணிந்து, சமூக இடைடவளியினை கடைபிடித்து மற்றும்‌ இரண்டு தவணை தடுப்பூசியினை செலுத்திக்‌ கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், அனைத்து கடைகளின்‌ நுழைவு வாயிலில்‌, வாடிக்கையாளர்‌ பயன்படுத்தும்‌ வகையில்‌ கை சுத்திகரிப்பான்கள்‌ கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல்‌ வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்‌ எனவும் தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment