8 மணிக்கு மேல் சாப்பிடாமல் இருந்தால் உடல் எடையை குறைத்துவிடலாம் என்பது உண்மையா..? தெரிந்துகொள்வோம்…

by Column Editor

இரவு 8 மணிக்குப் பிறகு இரவு உணவைச் சாப்பிடாதீர்கள், படுக்கைக்குச் செல்வதற்கு முன் பழங்களைச் சாப்பிடாதீர்கள், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க சிறிய உணவுகளை சாப்பிடுங்கள் என இப்படி பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. ஆனால் அறிவியல் படி இந்த கட்டுப்பாடுகள் சாத்தியமா…?

டயட் முறை என்பது நாளுக்கு நாள் அதன் கட்டுப்பாட்டை கட்டுப்படுத்திக்கொண்டே போகிறது. அதில், இரவு 8 மணிக்குப் பிறகு இரவு உணவைச் சாப்பிடாதீர்கள், படுக்கைக்குச் செல்வதற்கு முன் பழங்களைச் சாப்பிடாதீர்கள், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க சிறிய உணவுகளை சாப்பிடுங்கள் என இப்படி பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. ஆனால் அறிவியல் படி இந்த கட்டுப்பாடுகள் சாத்தியமா..? இல்லை இவை வெறும் கட்டுக்கதைகளா..?

ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் சுபாஸ்ரீ ராய் கருத்துப்படி, அறிவியல் படி இவை அனைத்தும் உண்மையில்லை என்கிறார். இதில் உடல் எடையைக் குறைக்க இரவு 8 மணிக்கு மேல் சாப்பிடக்கூடாது என்பதை பலரும் பின்பற்றுகின்றனர். இந்த பழக்கம் போதிய ஊட்டச்சத்து குறைபாட்டை உண்டாக்கலாம் என்கிறார் மருத்துவர். அப்படி டயட் குறித்து பரவும் கட்டுக்கதைகளையும் அதன் உண்மைகளையும் போட்டு உடைக்கிறார் மருத்துவர் சுபாஸ்ரீ ராய்.

தாமதமாக சாப்பிடுவது உங்கள் எடையை அதிகரிக்கச் செய்யும் : நீங்கள் நாள் முழுவதும் சாப்பிடும் உணவில் சீரான கலோரியை பின்பற்றுகிறீர்கள் எனில் இரவு சாப்பிடும் உணவு உங்களுக்கு கொழுப்பாக மாறாது என்கிறார் டாக்டர் ராய். இரவு உணவிற்குப் பிறகு பசி எடுத்தால், லேசான ஸ்நாக்ஸ் வகைகளை சாப்பிடலாம் என்கிறார். ஸ்நாக்ஸ் என்பது நட்ஸ் , ஆப்பிள் போன்ற வகைகளைத்தான் சாப்பிட வேண்டும்.

பழங்களை சாப்பிட சிறந்த நேரம் :

பெரும்பாலான சுகாதார வல்லுநர்கள் பழங்களை பகலில் சாப்பிட வேண்டும் என்றும் இரவில் அவற்றை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள். ஆனால் டாக்டர் ராய் கூறுகையில், பழங்களை எப்போது வேண்டுமானாலும் உண்ணலாம், இருப்பினும், பழங்களை சாப்பிடும் வகைகள் மற்றும் அதன் தன்மையை பொறுத்து சாப்பிட வேண்டும் என்கிறார்.

காலை உணவைத் தவிர்க்காதீர்கள்:

டாக்டர் ராயின் கருத்துப்படி இது மிகவும் பொதுவான கட்டுக்கதைகளில் ஒன்றாகும். காலை உணவு என்பது உங்கள் நாளை உற்சாகமாக தொடங்க உதவுகிறது. எனவே பசி இல்லை என்றாலும் கட்டாயமாக சாப்பிட வேண்டும் என்பதில்லை. அதற்காக மதிய உணவு சாப்பிடும் வரை பசிக்கவில்லை எனில் அதை கருத்தில் கொள்வது அவசியம்.

உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க இண்டர்மிட்டன் ஃபாஸ்டிங் : சிறிய அளவு உணவை உட்கொள்ளுதல் அல்லது கொஞ்சம் கொஞ்சமாக அடிக்கடி உணவு உண்பது உங்கள் உணவு பசிக்கு முழுமையானதாக இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்த வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

இரவில் கார்போஹைட்ரேட்டுகளை சாப்பிட வேண்டாம் :

ஊட்டச்சத்து நிபுணர்கள் பெரும்பாலும் இரவில் கார்போஹைட்ரேட்டுகளை சேர்க்கக்கூடாது என்று பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் அது கொழுப்பாக மாறும் என்கின்றனர். ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை? சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு ஊட்டச்சத்து மதிப்பு மாறாது என்று டாக்டர் ராய் கூறுகிறார். இந்த கட்டுக்கதைக்கு பின்னால் உள்ள ஒரு சாத்தியமான காரணம், மாலை 6 மணிக்கு பிறகு, உங்கள் வளர்சிதை மாற்றம் மெதுவாகி, நீங்கள் உண்ணும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் கொழுப்பாக சேமிக்கப்படும். இருப்பினும், நீங்கள் தூங்கும்போது, உங்கள் வளர்சிதை மாற்றம் வேகமடைகிறது. அதுவும் நீங்கள் உடல் உழைப்பு விஷயங்களை பின்பற்றினால்தான் சாத்தியம்.

முடிவு :

எப்போது சாப்பிட வேண்டும், எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டாம். அதற்கு பதிலாக ஊட்டச்சத்து மிக்க உணவு எது, எந்த உணவு ஆரோக்கியம் நிறைந்தது, எதை சாப்பிட்டால் உடலில் ஊட்டச்சத்தை சமநிலை செய்ய முடியும் , நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு எது என இப்படி உங்கள் உணவின் தேடுதலாக இருக்க வேண்டும்.

Related Posts

Leave a Comment