வெற்றிலை கொதிக்க வைத்த தண்ணீரில் இத்தனை நன்மைகளா..? இது தெரியம போச்சே….

by Column Editor

உங்களுக்கு வாய் துர்நாற்றம் பிரச்சனை இருக்கிறது எனில் வெற்றிலையை நன்கு கொதிக்க வைத்த நீரால் வாயை கொப்பளித்து வாருங்கள்.

வெற்றிலையில் இருக்கும் நன்மைகளை பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பு குறைவுதான். ஏனெனில் வெற்றிலையின் பயன்பாடு குறையக் குறைய அதன் மருத்துவ குணங்கள் பற்றிய தகவல்களும் பலருக்கும் தெரியாமலே இருக்கிறது. அந்த வகையில் வெற்றிலை பயன்படுத்துவதால் கிடைக்கும் அற்புத நன்மைகளை பற்றி பார்க்கலாம்.

முடி உதிர்வை தடுக்கும் :

வெற்றிலை முடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் உதவுகிறது. வெற்றிலையை நன்கு அரைத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து முடியின் வேர்களில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து பின் தலைக்கு குளித்து வாருங்கள். இவ்வாறு தொடர்ச்சியாக செய்ய தலைமுடி உதிர்வு பிரச்சனை கட்டுப்படுத்தலாம்.

வாய் சுகாதாரம் :

உங்களுக்கு வாய் துர்நாற்றம் பிரச்சனை இருக்கிறது எனில் வெற்றிலையை நன்கு கொதிக்க வைத்த நீரால் வாயை கொப்பளித்து வாருங்கள். அதோடு சாப்பிட்டவுடன் வெறும் வெற்றிலையை மென்று விழுங்குங்கள். இதனால் பற்களில் உள்ள உணவுத் துகள்கள், பாக்டீரியாக்களால் வரும் துர்நாற்றம் , பல் சொத்தை போன்ற பிரச்சனைகள் இருக்காது.

முகப்பருக்களை நீக்கும் :

முகத்தில் பருக்கள் இருப்பின் வெற்றிலையை அரைத்து அதை பருக்கள் உள்ள இடத்தில் தடவி வாருங்கள். வெற்றிலையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பருக்களை நீக்க உதவும். வெற்றிலை கொதிக்க வைத்த நீரால் முகத்தை கழுவி வந்தாலும் பருக்கள் அகலும்.

தோல் ஒவ்வாமை :

தோல் அரிப்பு, சொறி, ஒவ்வாமை இருப்பின் வெற்றிலை கொதிக்க வைத்த நீரை குளிக்கும் தண்ணீரில் கலந்து தினமும் குளித்து வாருங்கள். அதோடு அரிப்பு உள்ள இடங்களிலும் அரைத்து தடவி வாருங்கள். இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அரிப்பு, ஒவ்வாமையை போக்க உதவும்.

உடல் துர்நாற்றம் :

உடல் துர்நாற்றத்தால் மிகவும் சிரமப்படுகிறீர்கள் எனில் வெற்றிலை அதற்க்கு உதவலாம். வெற்றிலை எண்ணெய் அல்லது வெற்றிலை சாற்றை குளிக்கும் நீரில் கலந்து குளித்து வாருங்கள். அதோடு வெற்றிலை நீரை குடித்து வந்தாலும் உடலின் நச்சுத்தன்மை நீங்கும். துர்நாற்றமும் இருக்காது.

Related Posts

Leave a Comment