அதிரடியாக வெளியானது சிவகார்த்திகேயனின் டான் பட ரிலீஸ் தேதி

by Column Editor

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் தொலைக்காட்சி பிரபலங்கள் பலர் நடித்திருக்கும் படம் டான்.

அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சிபி இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார். லைகா புரொடக்ஷனுடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் பூஜையுடன் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் தொடங்கப்பட்டது. கொரோனா காரணமாக இடைவேளை விடப்பட்டு பின் பொள்ளாச்சி, ஆக்ரா, சென்னை என மாறி மாறி படப்பிடிப்பு நடக்க டிசம்பர் மாதம் முழு படப்பிடிப்பும் முடிந்தது.

அடுத்து ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது என்ன ரிலீஸ் தேதி எப்போது என்பது தான்.

இந்த நேரத்தில் தான் அதிரடியாக இந்த டான் திரைப்படம் மார்ச் மாதம் 25ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளனர்.

Related Posts

Leave a Comment