கார்த்திக் கொடுத்த ஐடியா… பத்திரிகையாளர் சந்திப்பில் தீபா சொன்னதென்ன

by Lifestyle Editor

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம் தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் அபிராமிக்கு சாப்பாடு ஊட்டி மருந்து போட்டு விட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, ஆனந்த் மற்றும் ரியால் என இருவரும் சேர்ந்து கடை ஒன்றிற்கு சென்று இருக்க அபிராமி வீடியோ கால் செய்ய ஆனந்த் சமாளித்து போனை வைக்கிறான்.

இந்த நேரத்தில் மீனாட்சி எந்த சட்டைக்காக ரியாவுடன் சண்டை போட்டாலோ அதே சட்டையில் இருப்பதை கவனிக்கிறாள். இதனால் திரும்பவும் வீடியோ கால் செய்து இந்த சட்டை எப்படி வந்தது என்று கேட்க ஆனந்த் உனக்கு பிடிக்கும் என்பதால் நானே பெங்களூரில் தேடிப் பிடித்து வாங்கினேன் என்று பொய் சொல்லி சமாளிக்கிறான்.

அடுத்ததாக தீபாவை பேட்டி எடுக்க டிவி சேனல் பத்திரிக்கையாளர்கள் அபிராமி வீட்டின் முன்பு கூட மீனாட்சி கார்த்தியிடம் விஷயத்தை சொல்கிறார். தீபா இதெல்லாம் எனக்கு பழக்கம் இல்லை என்று பேட்டி கொடுக்க மறுக்க கார்த்திக் உங்களுக்கு என்ன பிரச்சனை இப்படி பேட்டி கொடுக்கிறது ஒரு விதமான ப்ரோமோஷன் தான் இதனால் உங்களுக்கு அடுத்த கட்ட வாய்ப்புகள் கிடைக்கும் என்று சொல்லி அழைத்து வருகிறான்.

வீட்டில் உள்ள எல்லோரும் ஒன்று கூடி இருக்க தீபா கீழே வந்து செய்தியாளர்களிடம் எனக்கு பேட்டி கொடுக்கலாம் பழக்கம் கிடையாது என்று சொல்கிறாள். ஐஸ்வர்யாவில் ஆரம்பித்து அபிராமி வரை எல்லோரையும் அறிமுகப்படுத்தி அதன் பிறகு என்னுடைய இந்த நிலைமைக்கு காரணம் என்னுடைய ஹஸ்பண்ட் கார்த்திக் சார் தான் என சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

Related Posts

Leave a Comment