காலிஃப்ளவர் 65

by Column Editor

இந்த ரெசிபியை சுவைத்துப் பார்த்தால் இனி பேக்கரியில் வாங்க மாட்டீர்கள். வீட்டிலேயே செய்து சாப்பிடுவீங்க…

பேக்கரி , ரெஸ்டாரண்டுகளில் வாங்கும் காலிஃப்ளவர் 65 சிக்கன் சுவைக்கு இணையாக இருக்கும். அதை வீட்டி செய்ய முயற்சித்தால் அதே பக்குவத்தில் வராது. இதற்கு நீங்கள் என்ன செய்வது என்பதை தெரிந்துகொள்ள கிழே உள்ள ரெசிபியை பாருங்கள்

தேவையான பொருட்கள் :

காலிஃப்ளவர் – 1/2 கிலோ
மஞ்சள் – 1/2 tsp

ஊற வைக்க

கடலை மாவு – 1 1/2 tsp
மைதா – 1 1/2 tsp
சோள மாவு – 1 1/2 tsp
கரம் மசாலா – 1 tsp
சிவப்பு மிளகாய் தூள் – 1 tsp
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 tsp
எலுமிச்சை சாறு – சிறிதளவு
உப்பு – தே.அ

செய்முறை :

காலிப்ளவரை சுத்தம் செய்துவிட்டு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் காலிஃப்ளவர் , மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கொதி வர வேக வைத்துக்கொள்ளுங்கள்.

பின் தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்துக்கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில் ஊற வைக்க மசாலா கலக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.

பின் வேக வைத்த காலிஃப்ளவரை சேர்த்து பிரட்டிவிட்டு கலந்துகொள்ளுங்கள். காலிஃப்ளவரில் மசாலா நன்கு இறங்கியிருக்க வேண்டும்.

பின் 10 நிமிடங்கள் ஊற வைத்துக்கொண்டு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் காலிஃப்ளவரை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் காலிஃப்ளவர் 65 தயார்.

Related Posts

Leave a Comment