4 கோடியாக உயர்ந்த கொரோனா பாதிப்பு

by Column Editor

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நிலையில் இன்று 2 லட்சத்தை பாதிப்பு எண்ணிக்கை தாண்டியுள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில் 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்திருந்த பாதிப்புகள் மீண்டும் மிக வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,85,914 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,00,85,116 ஆக உயர்ந்தது. மேலும் புதிதாக 665 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,91,127ஆக உயர்ந்தது.
கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 2,99,073 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,73,70,971 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 22,23,018 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் 1,63,58,44,536 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 59,50,731 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment