“அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைனிலேயே தேர்வு நடைபெறும்” – அமைச்சர் பொன்முடி

by Column Editor

அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைனிலேயே தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அரசு மற்றும் தனியார் என அனைத்து கல்லூரிகளுக்கும் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதேசமயம் இறுதியாண்டு மாணவர்கள் இறுதி பருவ தேர்வு ஆன்லைனில் நடத்தப்பட மாட்டாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறியிருந்தார். தேர்வுகள் வருகிற பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கும் என்றும் 29ஆம் தேதி சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள கல்லூரி முதல்வர்களை அழைத்துப் பேசி சென்னை பல்கலைக்கழக கல்வி தரத்தை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 20,00,875 மாணவர்கள் ஆன்லைன் தேர்வை எழுதுகின்றனர். கடந்த நவம்பர் – டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு ஆன்லைனிலும், இறுதி செமஸ்டர் தேர்வு நேரடியாகவும் நடைபெறும். அரியர் தேர்வுகளும் ஆன்லைனிலேயே நடைபெறும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், பல்கலைக்கழகங்களில் பயிலும் 52,307 மாணவர்களும், 4.51 லட்சம் பொறியியல் மாணவர்கள் பயன்பெறுவார்கள். ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெறுவதால் 12 .94 லட்சம் கலைக்கல்லூரி மாணவர்கள் பயனடைவார்கள், ஆன்லைன் தேர்வால் 1.96 லட்சம் பாலிடெக்னிக் மாணவர்களும் பயனடைவார்கள் என்று விளக்கமளித்துள்ளார்.

Related Posts

Leave a Comment