நார்வே விழாவில் ‘மாநாடு’ படத்திற்கு 4 விருதுகள்.. சிறந்த இயக்குனராக வெங்கட் பிரபு தேர்வு !

by Column Editor

நார்வே திரைப்பட விழாவில் சிம்பு மாநாடு படத்திற்கு நான்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாநாடு’. அரசியல் த்ரில்லரில் உருவான இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டடித்தது. சிம்புக்கு கம்பேக் படமாக மாறியுள்ள இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 50‌ நாளை கடந்து சென்றுக்கொண்டிருக்கும் இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் நார்வே தமிழ் திரைப்பட விழாவில் மாநாடு படத்திற்கு 4 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த இயக்குனராக வெங்கட் பிரபும், சிறந்த நடிகராக ஒய்.ஜி.மகேந்திரனும், சிறந்த இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜாவும், சிறந்த படத்தொகுப்பாளராக கே.எல்.பிரவீனும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Posts

Leave a Comment