இலங்கையில் பிறப்பு, விவாக, இறப்பு சான்றிதழ்களை Onlineல் விண்ணப்பிப்பது எப்படி?

by Column Editor
0 comment

இலங்கையில் கோவிட் 19 தொற்று நிலைமை காரணமாக அரசாங்க சேவையினை பொதுவாக மேற்கொள்வதற்கு இயலாத சூழல் உள்ளது.

எனவே திணைக்களத்தின் பிரதான கடமையான பிறப்பு, விவாகம், இறப்புச் சான்றிதழ் பிரதிகளினை வழங்கும் நடவடிக்கைகளில் சிரமம் உள்ளதால், (Online) முறைமையினை விரைவாக மக்கள் செயல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பொதுமக்கள் தங்கள் மொபைல் போன்கள் அல்லது கணனி ஊடாக சான்றிதழ் நகல்களைக் கோர பின்வரும் இணைப்பைப் பயன்படுத்தலாம்.

மாஸ்டர் / விசா அட்டைகளைப் பயன்படுத்தி தொடர்புடைய பணத்தினை செலுத்திக்கொள்ள முடியும்.

Link – https://online.ebmd.rgd.gov.lk/

1. தங்களது ஸ்மார்ட் போன் அல்லது கணனி பாவனையில் விண்ணப்பித்தல்

2. விசா அல்லது மாஸ்டர் அட்டைகளை பயன்படுத்தி பணம் செலுத்துதல்

3. விரைவுத் தபால் மூலம் வீட்டுக்கு வரவழைத்தல் அல்லது அருகில் உள்ள பிரதேச செயலகத்திற்கு வருகை தந்து பெற்றுக் கொள்ளும் வசதி.

மேலதிக விபரங்களை தெரிந்து கொள்ள- 011 288 9518

இந்தச் சேவையினை ஆங்கிலம், சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment