366
			
				            
							                    
							        
    தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் வரும் ஜனவரி பொங்கல் அன்று வெளியாகவுள்ளது.
இப்படத்தில் இருந்து இதுவரை கிலிம்ப்ஸ் வீடியோ மற்றும் ஒரு சிங்கள் வெளியாகி இருக்கிறது.
அதனையடுத்து வலிமை படத்தின் எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை, ரசிகர்கள் அனைவரும் இதன் அடுத்த அப்டேட்டுக்காக காத்து கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் தல அஜித் மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் தல 61 படத்தில் நடிக்கவுள்ளார். அப்படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கவுள்ளார்.
மேலும் அப்படத்தில் தல அஜித் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிப்பாகத்தாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே தல 61 படமும் அடுத்த வருடம் தீபாவளிக்கு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன்முலம் தல அஜித் நடிப்பில் அடுத்த வருடம் இரண்டு திரைப்படங்கள் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
