இன்டர்நேஷ்னல் லெவலில் நடிகர் தனுஷிற்கு கிடைத்த உயரிய விருது- எந்த படத்திற்காக தெரியுமா?

by Column Editor

நடிகர் தனுஷ் ஆரம்ப கட்டத்தில் சினிமாவில் சந்திக்காத பிரச்சனைகள் கிடையாது. இவரெல்லாம் நடிக்க வந்துவிட்டாரா என மோசமாக விமர்சனம் எல்லாம் செய்யப்பட்டார்.

அங்கு தொடங்கிய அவரது பயணம் ஒவ்வொரு படத்திற்கு படம் தனது நடிப்பை மெழுகேற்றி இப்போது நடிப்புக்காகவே தேசிய விருது எல்லாம் பெற்றார்.

மோசமாக விமர்சனம் செய்தவர்களையே தனது நடிப்பின் மூலம் வியந்து பார்க்க வைத்துள்ளார்.

தற்போது தனுஷிற்கு இன்டர்நேஷ்னல் லெவலில் அவரது நடிப்புக்காக விருது கிடைத்துள்ளது. Brics Film Festival விருது விழாவில் அசுரன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது தனுஷிற்கு கிடைத்துள்ளது.

இந்த தகவலை தனுஷே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

Related Posts

Leave a Comment