மொட்டை மாடியில் நிர்வாணமாக கிடந்த இளம் பெண் சடலம்

by Lifestyle Editor

மொட்டை மாடிக்கு வீடியோ எடுக்க சென்ற இளைஞர்கள் அங்கே ஒரு இளம் பெண்ணின் சடலம் ஆடையின்றி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர். போலீசாரின் விசாரணையில் அந்த இளம் பெண்ணின் சடலத்தை எடுத்துச் சென்று நடத்திய பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை குர்லா நகரில் உள்ள அந்த அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு ஆடையின்றி கிடந்திருக்கிறார். அதே குடியிருப்பில் வசித்து வந்த 18 வயது இளைஞர் ஒருவர் தனது இரண்டு நண்பர்களுடன் ஒரு வீடியோ பதிவுக்காக மொட்டை மாடிக்கு சென்று இருக்கிறார்.

அப்போது ஆடையின்றி நிர்வாணமாக கிடந்த பெண்ணின் சடலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், இது குறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க போலீசார் விரைந்து வந்து அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் அந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.

தொடர்ந்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்வதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கியிருக்கின்றனர் போலீசார். இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

Related Posts

Leave a Comment