நாளை 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…

by Lifestyle Editor

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 2ம் தேதி வரை மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது . மேலும் நாளை உருவாக இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி , சற்று தாமதமாக நாளை மறுநாள் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் சூழலில் நாளை ,கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் எனவும், தூத்துக்குடி ,இராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் கனமழை காரணமாக , 3 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களுக்கும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Related Posts

Leave a Comment