கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை உயிரிழப்பு – சோகத்தில் ரசிகர்கள்

by Column Editor

பிரபல இந்தி நடிகை மாதவி கோங்கடே கொரோனா பாதிப்பால் உயிரிழந்தது பாலிவுட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் திரைப்படங்கள், டிவி தொடர்களில் நடித்துள்ள மாதவி கோங்கடே ’அனுபமா’ என்ற டி.வி.சீரியலில் நடித்ததன் மூலம் அதிகம் பிரபலமானார்.

இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன், கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மும்பை உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவர் மறைவுக்கு இந்தி சின்னத்திரை மற்றும் திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகை ரூபாலி கங்குலி சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், ‘பேசாத கதைகள் அவ்வளவு இருக்கிறது. அதற்குள் சென்றுவிட்டீர்களே, அம்மா’ என்று தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment