ஒத்த செருப்பு இந்தி ரீமேக்கின் படப்பிடிப்பு தள வைரல் புகைப்படங்கள்!

by Column Editor

‘ஒத்த செருப்பு சைஸ் 7’ இந்தி ரீமேக் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் உருவான ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ தமிழ் சினிமாவின் மிகவும் புதுமையான முயற்சியாக அமைந்தது. படம் முழுவதும் பார்த்திபன் மட்டும் தான் திரையில் தோன்றுவார். ஆனாலும் சலிப்பு ஏற்படாதவாறு சுவாரசியமாக எடுத்திருந்தார் பார்த்திபன். விமர்சன ரீதியாகயும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்திற்கு தேசிய விருதுகள் கிடைத்தது. இதில் துல்லியமான ஒலிக்கலவையை அமைத்ததற்காக அனைவரின் பாராட்டையும் பெற்றார் ரசூல் பூக்குட்டி.

தற்போது ஒத்த செருப்பு படம் இந்தியிலும் ரீமேக் ஆகி வருகிறது. இந்தி ரீமேக்கை பார்த்திபன் இயக்க அபிஷேக் பச்சன் நடித்துள்ளார். இந்தி வெர்ஷனுக்கு இளையராஜா இசையமைத்து வருகிறார்.

தற்போது ‘ஒத்த செருப்பு இந்தி ரீமேக் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில் பார்த்திபன் காட்சியை விளக்க அபிஷேக் பச்சன் ஆர்வமாக கேட்டுகொண்டுருக்கிறார். முதலில் இந்தியில் ரீமேக்கில் நடிக்க நடிகர் நவாசுதீன் சித்திக்குடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் சில காரணங்களுக்காக அவர் நடிக்கவில்லை. இந்தி ரீமேக்கிற்கு பிறகு இந்த படம் ஆங்கிலத்தில் ரீமேக்காக இருப்பதாகக் கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment