யுவன் ஷங்கர் ராஜா இசையில் கதாநாயகனாக அறிமுகமாகும் குக் வித் கோமாளி புகழ்!

by Lifestyle Editor

குக் வித் கோமாளி புகழ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் கிடைத்துள்ளது.

விஜய் டிவியில் அது இது எது நிகழ்ச்சியில் சிறு சிறு கதாபாத்திரங்களில் வந்து ரசிகர்களாய் மகிழ்வித்த புகழுக்கு குக் வித் கோமாளி பெரும் வரப் பிரசாதமாக அமைந்தது. அந்த நிகழ்ச்சி புகழை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. தற்போது புகழுக்கு தற்போது பல பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

அருண் விஜய் உடன் யானை, பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் புதிய படம் என பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் புகழ் புதிய படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அந்தப் படத்திற்கு ‘மிஸ்டர் ஜூ கீப்பர்(Mr. Zoo Keeper)’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தில் விலங்குகள் சரணாலய பாதுகாவலராக அவர் நடித்துள்ளதாகத் தெரிகிறது.

இந்தப் படத்தை ‘என்னவளே’ படத்தை இயக்கிய சுரேஷ் இயக்குகிறார். சந்தானத்தின் டிக்கிலோனா படத்தில் நடித்த ஷிரின் காஞ்ச்வாலா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். J4 ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.

Related Posts

Leave a Comment