583
ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் 1991ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சின்ன கவுண்டர்.
இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக சுகன்யா நடித்திருந்தார்.
மேலும் மனோரமா, கௌண்டமணி, செந்தில், வடிவேலு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
கிராமத்து கதையம்சம் கொண்ட இப்படம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பினை பெற்று, மாபெரும் வெற்றியடைந்தது.
இந்நிலையில், இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது விஜயகாந்த் கிடையாதாம்.
ஆம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் இப்படத்தில் நடிக்க முதல் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டாராம்.
ஆனால், அப்போது அவருடைய கால்ஷீட் கிடைக்காமல் போனதன் காரணமாக இப்படத்தில் விஜயகாந்த் நடித்து, படமும் சூப்பர்ஹிட்டானது.