அஜித் சார் உடன் நடிக்க விருப்பம் என தன் ஆசையை வெளிப்படையாக கூறிய ரஜினி பட வில்லன்!

by Column Editor

நடிகர் விஜய்யுடன் தளபதி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, இயக்குனர் H. வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் போலீஸ் அதிகாரி கார்த்தி தேடப்படும் முக்கிய குற்றவாளியாக உமர் என்னும் கதாபாத்திரத்தில் தன் அசாத்திய வில்லன் நடிப்பை வெளிப்படுத்தியவர் தான் அபிமன்யூ சிங்.

இன்றும் உமர் என்றே ரசிகர்கள் மத்தியில் அறியப்படுகிறார் இவர். சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்திருந்த இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தனது சினிமா அனுபவங்களை குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.

பேட்டியின்போது தளபதி விஜய், கார்த்தி மற்றும் தற்போது ரஜினி சாருடனும் நடித்து விட்டீர்கள் அடுத்ததாக யாருடன் நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறீர்கள் என்ற கேள்வியை கேட்டபோது எனக்கு அஜித் சாருடன் நடிக்க விருப்பம் என தன் விருப்பத்தை தெரிவித்திருக்கிறார் அபிமன்யூ சிங்.

Related Posts

Leave a Comment