பசியில் தவித்த மக்கள் : உதவி செய்யும் விஜய் மக்கள் இயக்கம்

by Column Editor

மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் உதவி செய்து வருகின்றனர். வடகிழக்கு பருவமழை பருவகாலம் என்பதால் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மற்றும் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக அதி கனமழை பெய்து வருகிறது. விடாது பெய்து மழையால் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் சுரங்கப்பாதை மற்றும் தெருக்களில் மழைநீர் தேங்கி வெளியேற முடியாமல் நிற்கிறது. தற்போது மழை குறைந்துள்ளதால் மழை நீரை அகற்றம் பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோன்று சென்னையின் புறநகர் பகுதிகளிலும் இதே நிலைதான் நீடித்து வருகிறது.

இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை புறநகர் பகுதியான கும்மிடிப்பூண்டி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டு பசி பட்டினியோடு மக்கள் இருந்து வந்தனர். இதையறிந்த விஜய் மக்கள் இயக்கத்தினர், பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று பசியோடு இருக்கும் மக்களுக்கு உணவளித்து வருகின்றனர். விஜய்யின் மக்கள் இயக்கத்தினரின் இந்த செயல் அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.

Related Posts

Leave a Comment